இளையராஜா இசை நிகழ்ச்சியை தடுக்க முயற்சி: போராட்டம் நடத்தியவர்கள் மீது விஷால் புகார்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். ஆனால்
திட்டமிட்டப்படி இளையராஜாவின் நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு: விஷால் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்த்திற்கு பூட்டு போட்டு பூட்டியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரி விஷால் தரப்பினர் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தலைமையில் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் , நிர்வாகிகளுக்கு தெரியாமல் தயாரிப்பாளர்கள் சங்கத்தை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு கும்பல் அலுவலகத்திற்கு பூட்டு போட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
Next Story