"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு" : விஷாலுக்கு எதிராக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், சங்க கட்டடத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை, சக உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர். சங்கத்தின் வங்கிக் கணக்கில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் மாதா மாதம் வெளியாவதால், சிறிய படங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றனர். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விஷால் மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்தநிலையில், சென்னை தியாகராகய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகம் முன்பு திரண்ட தயாரிப்பாளர்கள், கேட்டிற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சாவியை முதலமைச்சரிடம் கொடுத்து, விஷாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்போவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ள நிலையில், இளையராஜாவை வைத்து பணம் சம்பாதிக்க விஷால் நினைப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்