"எனக்கு எப்போதுமே பிடித்த நடிகர் ரஜினிகாந்த்" : சென்னையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்

"எனக்கு எப்போதுமே பிடித்த நடிகர் ரஜினிகாந்த்" : சென்னையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்
x
ரஜினிகாந்தை எப்போதும் பிடிக்கும் என இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்தார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்றார். அப்போது, அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹிருத்திக் ரோஷன், தனக்க சென்னையை ரொம்ப பிடிக்கும் எனவும் சமீபத்தில் பிடித்த தமிழ் படம் 'விக்ரம் வேதா' எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்தை எப்போதும், தனக்கு பிடிக்கும் எனவும் தமிழில் நடிப்பது பற்றி தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்