நடிகர் பார்த்திபன் வீட்டில் நகைகள் திருட்டு : மாநகர காவல் ஆணையரிடம் புகார்

தன் வீட்டில் இருந்து திருடு போன ஒன்றரை கிலோ தங்க நகைகள் குறித்த வழக்கில் உரிய நடவடிக்கை கோரி நடிகர் பார்த்திபன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நடிகர் பார்த்திபன் வீட்டில் நகைகள் திருட்டு : மாநகர காவல் ஆணையரிடம் புகார்
x

தன் வீட்டில் இருந்து திருடு போன ஒன்றரை கிலோ தங்க நகைகள் குறித்த வழக்கில் உரிய நடவடிக்கை கோரி நடிகர் பார்த்திபன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டின் லாக்கரில் இருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காணாமல் போனதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை கோரி அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்