மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது - ஜி.வி.பிரகாஷ்

கஜா புயல் பாதிப்பை அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது, அரசுடன் இணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது - ஜி.வி.பிரகாஷ்
x
சர்வம் தாளமயம் திரைப்படம் குறித்து அந்த படக் குழுவினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது  பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ்,  கஜா புயல் பாதிப்பை அரசால் மட்டும் சீர்செய்ய இயலாது என்றும், அனைவரும் சேர்ந்து பாதிப்பை சீர் செய்ய முயற்சிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்