சர்கார் பட விவகாரம் : பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்
பதிவு : நவம்பர் 02, 2018, 01:58 PM
சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார்.
திரைப்பட எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில்,எழுத்தாளர் சங்கத் தலைவராக போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், மனசாட்சியுடன் நேர்மையாக செயல்பட்டு வந்ததாகவும், சர்கார் படப் பிரச்சினைக்கு முன்பு எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சர்கார் படப்பிரச்சினையில், கதை திருடப்பட்டதாக புகார் தெரிவித்தவரின் பக்கம் உண்மை இருப்பதாக உணர்ந்த தான், சங்கத்தில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த பிரச்சினையை நியாயமாக முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால், அந்தப் பிரச்சினை மூலம், தான் பல அசவுகரியங்களை சந்தித்ததாகவும், தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக பொறுப்புக்கு வந்ததால் தான் தனக்கு இந்த நிலைமை என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.எனவே, திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள பாக்யராஜ், தேர்தலில் முறையாக போட்டியிட்டு, போதுமான ஆதரவுப் பெற்று மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், சங்கத்தின் நலன் கருதி, சர்கார் படப் பிரச்சினையில் தனக்கு நேர்ந்த அசவுகரியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் பாக்யராஜ் கூறியுள்ளார்.சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸிடம்  பலமுறை கெஞ்சியும் அவர் உடன்படாததால், சர்கார் கதையை வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதற்காக பட தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பாக்யராஜ், தனது கடித்தில் தெரிவித்துள்ளார்


தொடர்புடைய செய்திகள்

சென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்

நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.

14977 views

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

733 views

பிற செய்திகள்

நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

24 views

புதிய படத்தில் விஜய் தாதா

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.

2058 views

"என்.ஜி.கே" பாடலின் புதிய சாதனை

NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

952 views

எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு சிக்கல்

எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

742 views

தனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்

நடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

390 views

72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.

339 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.