அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை...

நடிகர் அர்ஜூனின் நண்பர் மிரட்டுவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை...
x
நிபுணன் பட கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன், மீடூ விவகாரத்தில் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதனை மறுத்த நடிகர் அர்ஜூன், தாம் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை எனவும்,  சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள் என்றும்  விளக்கம் அளித்தார். மேலும், பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக 5 கோடி ரூபாய் கேட்டு நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அர்ஜூனின் நண்பர் பிரசாந்த் என்பவர் மிரட்டுவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்