96' திரைப்படம் வெளியீடு - ரூ.1.50 கோடி விவகாரம் - விஷால் முடிவு

தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை நிதி நிறுவனத்தில் நடிகர் விஷால் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது.
96 திரைப்படம் வெளியீடு - ரூ.1.50 கோடி விவகாரம் - விஷால் முடிவு
x
* விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் '96' திரைப்படம்  வெளியாகியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை நிதி நிறுவனத்தில் நடிகர் விஷால் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது. 


* அந்தப் பணத்தை உறுதியளித்தபடி,  தயாரிப்பாளர் நந்தகோபால் திருப்பித் தராததால், விஜய் சேதுபதியே அந்தத் தொகையை தருவதாகக் கூறியதால், திட்டமிட்டபடி படம் வெளியானது. இந்நிலையில், விஜய் சேதுபதி கொடுப்பதாக கூறிய பணத்தை தரவேண்டாம் எனவும், அந்தப் பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துவிட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்