எப்படி இருக்கிறது ராட்சசன் ?
பதிவு : அக்டோபர் 05, 2018, 06:48 PM
நடிகர் விஷ்ணு விஷால் ,அமலாபால் ,ராதாரவி ,நிழல்கள் ரவி ,முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் ,அமலாபால் ,ராதாரவி ,நிழல்கள் ரவி ,முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார்.அருண் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும்" விஷ்ணு விஷால்" க்கு இயக்குநராகும் ஆசை. அதற்காக உலகம் முழுவதும் நடந்த சைக்கோ கிரைம் செய்திகளை சேகரித்து அதை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு தேடி அலைகிறார். வாய்ப்பு கிடைக்காததால் தனது மாமா உதவியுடனும் ஏற்கெனவே அவரது தந்தை போலீஸ் அதிகாரியாக இருந்து இறந்தவர் என்பதனாலும் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் ஆகிறார்தனது 15 வயது மகளை காணவில்லை என்று ஒருவர் ஹீரோ இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண்ணின் உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹீரோ தன் வீட்டிற்கு சென்று அவர் சேகரித்த க்ரைம் செய்திகளை புரட்டிப் பார்க்கிறார். போலீஸ் வேலைக்கு சேரும் முன்பு நடந்த  இளம்பெண் படுகொலையுடன் இந்த  கொலையும் ஒத்துப் போகிறது. ஒரு சைக்கோ கொலைகாரன் குறிப்பாக 15 வயது பள்ளி மாணவிகளை கடத்தி கொடூர கொலை செய்கிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் .
யார் இந்த சைக்கோ கொலைகாரன்?அவன் எதற்கு இத்தனை கொலைகள் செய்கிறான் ? அவனை எப்படி ஹீரோ பிடித்தார்? என்பதை நல்ல திரைக்கதை அமைத்து மிரட்டலான சைக்கோ த்ரில்லராக கொடுத்துள்ளார் இயக்குனர்.


முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம் குமார் இயக்கும் இரண்டாவது படம் ராட்சசன். பொதுவாக சைக்கோ த்ரில்லர் படங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்காது. ஆனால் இந்த படம் இரண்டரை மணி நேரம் ஓடினாலும் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து நம்மை பிரம்மிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

நடிகர் விஷ்ணு விஷால் நிஜத்தில் ஒரு போலீஸ் அதிகாரி எவ்வாறு சைக்கோ கொலைகளை கையாள்வாரோ அதேபோல் தனது எதார்த்த நடிப்பில் அசத்தியுள்ளார். இந்த படம் அவரின் 
திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். பள்ளிக்கூட டீச்சராக வரும் அமலாபால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முண்டாசுப்பட்டி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த முனீஸ்காந்த், காளி வெங்கட் இருவருக்கும் மனதில் நிற்கும்படி எமோஷனலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.ஜிப்ரானின் பின்னணி இசையில் உலகத்தரமான சைக்கோ திரில்லர் படத்தை எடுத்து அசத்தி உள்ளார் இயக்குனர் ராம் குமார்.

தொடர்புடைய செய்திகள்

"கதாநாயகிகள் தாய் வேடத்தில் நடிக்க கூடாதா?"- நடிகை அமலா பால்

"கதாநாயகிகள் தாய் வேடத்தில் நடிக்க கூடாதா?""நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி வருகிறது? - நடிகை அமலா பால் வேதனை

49 views

பிற செய்திகள்

"என் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை" - நடிகர் சண்முகராஜன்

நடிகை ராணி தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை கூறிவருவதாக நடிகர் சண்முகராஜன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

43 views

"மீடூவில் வரும் நியாயமான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க வேண்டும்" - நடிகை ரோஹிணி

"பெண்ணியம் பேசுபவர்களை பார்த்து சிரித்தார்கள்" - நடிகை ரோஹிணி

189 views

பாலியல் தொந்தரவு இப்போது பேசாவிட்டால், எப்போதும் மாறாது - வரலட்சுமி சரத்குமார்

பாலியல் தொந்தரவு இப்போது பேசாவிட்டால், எப்போதும் மாறாது - வரலட்சுமி சரத்குமார்

842 views

இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கவிஞர் லீனா மணிமேகலை #Metoo மூலம் புகார்

திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக, கவிஞர் லீனா மணிமேகலை, me too HASH TAG மூலம் புகார் தெரிவித்துள்ளார்

507 views

நடிகை ராணி பாலியல் புகார் : வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன?

நடிகை ராணி பாலியல் புகார் : வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன?

1219 views

"மீடூ என்றால் என்ன?" - கோபமடைந்த பாரதிராஜா

"மீடூ என்றால் என்ன?" - கோபமடைந்த பாரதிராஜா

2654 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.