பாலியல் துன்புறுத்தல்,அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச கூடாது - நடிகை தனுஸ்ரீ த‌த்தா அழைப்பு

தன்னை போல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும் என நடிகை தனுஸ்ரீ த‌த்தா அழைப்பு விடுத்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்,அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச கூடாது - நடிகை தனுஸ்ரீ த‌த்தா அழைப்பு
x
10 ஆண்டுகளுக்கு முன்பு ஹார்ன் ஓகே பிளீஸ் என்ற படத்தில் நடித்த போது, இயக்குநரும், நடிகருமான நானா படேகர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த‌தாக நடிகை தனுஸ்ரீ த‌த்தா குற்றம்சாட்டினார். இவரது குற்றச்சாட்டுகள் இந்தி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகை பிரியங்கா சோப்ரா, டுவிங்கிள் கண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து நானா படேகரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தனுஸ்ரீ த‌த்தா காரை வழிமறித்து தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த வீடியோ கடந்த 2008 ஆம் ஆண்டு நானா படேகர் மீது தனுஸ்ரீ புகார் அளித்த போது, அவரது ரசிகர்கள் தாக்கிய வீடியோ என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தனுஸ்ரீ த‌த்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நானா படேகர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை தனுஸ்ரீ த‌த்தா,  தன்னை போன்று பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான நடிகைகள் வெளியே கூறாமல் அச்சுறுத்தவே இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன என கூறியுள்ளார். அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை நடிகைகள் வெளியே கூறினால், மொத்த நாடும் அவர்களுக்கு துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்