"16 வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்" - சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி பத்மா லட்சுமி

16 வயதிலேயே தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி பத்மா லக்‌ஷ்மி தெரிவித்துள்ளார்.
16 வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானேன் - சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி பத்மா லட்சுமி
x
கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து பின்னர் அமெரிக்காவில் பிரபல மாடல் அழகியாக திகழ்ந்தவர் பத்மா லக்‌ஷ்மி. பத்மா பார்வதி லட்சுமி வைத்தியநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், தான் 16 வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிக்கை ஒன்றில் தான் எழுதிவரும் கட்டுரையில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பத்மா மனம் திறந்துள்ளார். 16 வயதில் தன்னுடன் பழகிய 23 வயது இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஆனால் அதுகுறித்து தான் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று பத்மா தெரிவித்துள்ளார். 

தான் சிறுமியாக இருந்தபோது சென்னை வந்ததாகவும் அப்போதும் தனக்கு பாலியல் சீண்டல்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது எட்டு வயது மகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறி வளர்த்து வருவதாக தெரிவித்துள்ள பத்மா லக்‌ஷ்மி தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை குறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்