எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?
பதிவு : ஆகஸ்ட் 19, 2018, 11:08 PM
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, அறந்தாங்கி நிஷா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கத்தில் படத்தை லைகா புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை என்ன?ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் ஹீரோயின். கல்லூரிக்குச் செல்லும் தங்கை, வயதான பெற்றோர்கள். ஒரு நாள் ஹீரோயினுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மருத்துவ செலவிற்கு 15 லட்சம் தேவைப்படுகிறது. ஹீரோயின் அந்த பணத்தை கட்டுவதற்காக பல முயற்சிகளை செய்கிறாள். அப்படி முயற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக ஒரு போதைபொருள் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறாள். வேறு எங்கும் பணம் கிடைக்காத நிலையில் அந்த போதைப்பொருள் கும்பலிடம் வேலை  செய்கிறாள். அவர்களும் போலீஸ் தொல்லையிலிருந்து தப்பிக்க இவளை பயன்படுத்துகிறார்கள். பிறகு எப்படி அந்த கும்பலிடம் இருந்து ஹீரோயின் மற்றும் அவர் குடும்பத்தினர் தப்பிக்கிறார்கள்?என்பது தான் கதை.  நடிகை நயன்தாரா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதேபோல் இந்த படத்திலும் கதை தேர்வு அபாரம். ஒரு அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு  தைரியமாக எல்லா விஷயத்தையும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் நயன்தாரா. இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு கிட்டத்தட்ட ஹீரோவுக்கு நிகரான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கிறார். 'எனக்கு கல்யாணம் வயசு தான் வந்துருச்சுடி லவ் பண்ணவா'
யோகி பாபுவின் இன்ட்ரோ பாடல். அதற்கு அவர் ஆடும் நடனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. படம் முழுக்க அவரது நகைச்சுவை வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. இசை போதை தரும் அனிருத் பாடல்கள் அருமை. ரசிகர்களை கோகிலா ஏமாற்றவில்லை!

பிற செய்திகள்

அத்தி வரதரை தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா...

15 வது நாளான இன்று இசையமைப்பாளர் இளையராஜா அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

126 views

ரஜினி கடவுளின் குழந்தை என மகள் நெகிழ்ச்சி

தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

37 views

நடன இயக்குநர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : கமல் - பிரபுதேவா உள்ளிட்டோர் வாக்களித்தனர்

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட நடன இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

35 views

4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

123 views

சிவகார்த்திகேயன் 16, குடும்ப படமா?

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 16வது படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

22 views

மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.