நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்...

ஒலி மாசு உண்டாக்கும் தடை செய்யப்பட்ட சைலன்சரை பொருத்தி, அதிவேகமாக கார் ஓட்டி வந்த நடிகர் ஜெய்யை, போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்...
x
நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்..சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், நேற்று இரவு அதிக சத்ததை எழுப்பிக்கொண்டு, கார் ஒன்று அதிவேகமாக வந்தது. காரை மடக்கி போலீசார் விசாரணை நடத்திய போது, அதனை ஓட்டி வந்தது நடிகர் ஜெய் என தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட சைலென்சரை இனி பயன்படுத்தக் கூடாது என அவரை போலீசார் எச்சரித்தனர். பின்னர், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விளக்கும் விதமாக, நடிகர் ஜெய்யை வைத்து, வீடியோ ஒன்றை பதிவு செய்த போலீசார், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

6 மாதத்திற்கு கார் ஓட்ட அனுமதிக்கப்படாத ஜெய்...


 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய், கார் ஓட்ட ஆறு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 Next Story

மேலும் செய்திகள்