Dharmapuri | பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாட்டம்

பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாட்டம்

Dharmapuri | பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாட்டம் #dharmapuri #thanthitv பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தமிழ்நாடு மொபைல்போன் வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாலக்கோடு திரௌபதியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற இந்த விழாவிற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பாபு என்கிற அன்வர்ஷரிப் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் மாதையன், நகரத் தலைவர் அருளானந்தம், நகரச் செயலாளர் ஆசிப், நகரப் பொருளாளர் பசுபதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, கோவில் முன்பு பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட துணைத் தலைவர் அன்வர்ஷரிப், மொபைல் சங்கத்தைச் சேர்ந்த வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களின் மாணவ, மாணவிகளின் கல்விச் செலவை ஏற்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஆண்டுதோறும் 20 மாணவ, மாணவிகளின் கல்விச் செலவை சங்கம் ஏற்கும் என்றும், இதில் 10 மாணவர்களின் கல்விச் செலவை மாநிலத் தலைவர் சோமசுந்தரம் BABL ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், மீதமுள்ள 10 மாணவர்களின் கல்விச் செலவை சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

X