Bus Accident | சாலையை விட்டு வெளியே பாய்ந்த பஸ்... அலறிய பயணிகள் - புரண்டு கிடக்கும் ஷாக் வீடியோ

Bus Accident | சாலையை விட்டு வெளியே பாய்ந்த பஸ்... அலறிய பயணிகள் - புரண்டு கிடக்கும் ஷாக் வீடியோ

#thiruvannamalai | #accident சாலையை விட்டு வெளியே பாய்ந்த பஸ்... அலறிய பயணிகள் - புரண்டு கிடக்கும் ஷாக் வீடியோ திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரி சென்ற பேருந்து, தென்வணக்கம்பாடி கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X