மதுரையில் மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு - ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

x

மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியின் போது உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அங்கு, கடந்த 7ம் தேதி குழாய் பதிக்கும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடிநீர் குழாய் வெடித்ததில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற நபர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இறப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்