இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை செல்கிறார்.அதன்படி சென்னையில் இருந்து காலை 11 முப்பது மணிக்கு மதுரைக்கு செல்லும் முதலமைச்சர், இரவு மதுரையில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். நாளை காலை விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்படும் தமிழக முதலமைச்சர், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, மதுரை நெல்பேட்டை மைய சமையல் கூடத்தை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின், உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், காலை 8 மணியளவில், மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் காலை உணவை சாப்பிட உள்ளார். தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் முதலமைச்சர், விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்