"சென்னையில் செப். 28-ல் சிறை நிரப்பும் போராட்டம்" - தமிழக பாஜக அறிவிப்பு
"சென்னையில் செப். 28-ல் சிறை நிரப்பும் போராட்டம்" - தமிழக பாஜக அறிவிப்பு
வரும் 28 ஆம் தேதி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.முன்னதாக ஆ.ராசா எம்.பி., சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறி பாஜக சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பும் போரட்டம் நடத்தபடும் என தெரிவித்தார். இந்நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில துணை தலைவர் கருநாகராஜன், சென்னை மாவட்ட பாஜக தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, சென்னையில் வரும் 28 ஆம் தேதி மாலை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story