அதிமுக வேட்பாளர் யார்? - இன்று அறிவிப்பு

அதிமுக வேட்பாளர் யார்? - இன்று அறிவிப்பு
x

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நேரத்தில் நடத்தப்படுகிற இடைத்தேர்தல் என்பதால் அதிமுக அதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை அறுவடை செய்ய காத்திருக்கும் அதிமுக,கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்