"டெல்லி மூலம் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு அதிமுக குறித்து பேச தகுதி இல்லை".. பொங்கியெழுந்த ஈபிஎஸ்

x

"டெல்லி மூலம் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு அதிமுக குறித்து பேச தகுதி இல்லை"

மேடையில் பொங்கியெழுந்த ஈபிஎஸ்

#aiadmk #eps #admkvsbjp #thanthitv

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்றும், ஜூன் 4-ம் தேதிக்கு பின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காணாமல் போவார் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, டெல்லி மூலம் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு அதிமுக குறித்து பேச எந்தவித தகுதியும் இல்லை என்று கூறினார். அண்ணாமலை நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது ஒன்றாக உள்ளதால், அவர் விரக்தியின் உச்சத்தில் பேசி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்


Next Story

மேலும் செய்திகள்