"உதயநிதி" என சொன்ன சிறுவன்..நகைச்சுவையாக பதில் சொன்ன டி.ஆர்.பாலு

x

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டிஆர் பாலு கடப்பேரி திருநீர்மலை சாலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது அங்கு வந்த சிறுவனின் பெயரைக் கேட்ட போது, உதயநிதி என சிறுவன் கூறிய நிலையில், நாளை அமைச்சர் உதயநிதி வருகிறார்... நீயும் வருகிறாயா என நகைச்சுவையாகக் கேட்டார்... கஸ்தூரி பாய் நகரில் இஸ்லாமியர்கள் திரண்டு நின்று வரவேற்ற போது இஸ்லாமியக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார்... தொடர்ந்து டி.ஆர்.பாலு கையில் உதயசூரியன் சின்னத்தைக் காட்ட சிறுமியும் உதயசூரியன் சின்னத்தைக் காட்டியது திமுக தொண்டர்களை மகிழச் செய்தது...


Next Story

மேலும் செய்திகள்