`திமுக-அதிமுக இடையே தான் 100% போட்டி.. ஒப்புக்கொள்கிறேன்` - ஒரே போடாக போட்ட GK வாசன்

x

எதிர்மறை வாக்குகளைப் பெறுவதில்தான் திமுக - அதிமுக இடையே போட்டி இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள த.மா.கா அலுவலகத்தில் ஜி.கே.வாசனை மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரப் பாடலை ஜி.கே.வாசன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜி.கே.வாசன், நாளை பிரசாரத்தை தொடங்க இருப்பதாகவும், வருகிற 30ம் தேதி த.மா.கா தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்