கண்ணசைத்த டெல்லி.. குஷியில் ஓபிஎஸ்.. பூஸ்ட் கொடுக்கும் பாஜக

x

#ops #jpnadda #bjp

ராமநாதபுரம் தொகுதி, பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை வாகன பேரணி நடத்த உள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். நாளை புதுச்சேரியில் பிரசாரம் செய்யும் அவர், பின்னர், விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பரமக்குடி செல்கிறார். தொடர்ந்து, பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் முதல் காந்தி சிலை வரை நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்