அதிமுகவை சீண்டிய ராதிகா சரத்குமார்... கேட்ட அந்த ஒரு கேள்வி
விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பட்டாசு ஆலையின் பேருந்தில் ஏறி, தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய அவர், பட்டாசு தொழிலை பாதுகாக்க போராடி வருவதாக கூறினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய ராதிகா சரத்குமார், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களுக்கே தெரியாது என்றார். அதே போன்று, மூன்றாவது அணியாக உள்ள அதிமுக, யாரிடம் என்ன கேட்பார்கள் என்று தெரியாது என்று விமர்சித்த அவர், நல்லது நடக்கும் இடத்தில் இருப்பதால், தனக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
Next Story
