காவல்நிலைய மாடியில் இருந்து குதித்த இளைஞர் - தப்பி செல்ல முயற்சி

x

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2வது மாடியில் இருந்து குதித்த வடமாநில இளைஞர், தப்பிச் செல்ல முயன்று கீழே விழுந்தது தெரிய வந்துள்ளது. விசாரணைக்காக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வடமாநில இளைஞர் கழிவறைக்கு செல்வதாக கூறி வெளியே வந்த நிலையில், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதனிடையே, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாடியில் இருந்து தாவி மரக்கிளையை பிடிக்க முயன்ற நிலையில், கிளை முறிந்து கீழே விழுந்தது தெரிய வந்துள்ளது. இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்