முதல் டெஸ்ட் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முல்தானில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 93 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 251 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 5 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றது.
Next Story

