பாகிஸ்தான் செல்லும் டிரம்ப்? - ஓபனாக உடைத்த வெள்ளை மாளிகை
டிரம்ப் பாகிஸ்தான் பயணமா? வெள்ளை மாளிகை மறுப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் செப்டம்பரில் பாகிஸ்தான் வருகை தர இருப்பதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்க அதிபரின் பாகிஸ்தான் பயணம் குறித்து திட்டமிடப்படவில்லை என்றும், அத்தகைய பயண ஏற்பாடுகளை உறுதிப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடைசியாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யு புஷ், கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story
