Trump | Pope Leo | `ஜெயிலர்' பட பாணியை கையில் எடுத்த டிரம்ப் | கொதித்தெழுந்த போப் லியோ
அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரிவுபடுத்த முயன்று வரும் சூழலில், அதற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் போப் லியோ. ஒவ்வொரு மனித உயிரும் கருவில் உருவானது முதல் புனிதமானது என்றும், உயிர் வாழ்வுரிமையே மற்ற அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை என்றும் வலியுறுத்தியுள்ளார். ஒரு சமூகம் மனித உயிரின் புனிதத்தைப் பாதுகாக்கும் போது மட்டுமே செழிப்படையும் எனக் குறிப்பிட்ட அவர், சிறைச்சாலைகள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடங்களாக இருக்க வேண்டும் என்றார். அதே வேளையில், ஊசி மூலம் மரண தண்டனை அளிப்பதில் உள்ள மருந்து தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, துப்பாக்கியால் சுடுதல் மற்றும் மின்சார நாற்காலி போன்ற முறைகளை மீண்டும் கொண்டு வர அமெரிக்க நீதித்துறை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
