உலகின் உச்ச அமைப்பு கடும் வார்னிங்...

x

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கண்டனத்துக்குரியது என ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீண்டகாலமாக இருந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், எந்த காரணத்திற்காகவும் பொதுமக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். சமீபத்திய பிரச்சினையால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனையளிப்பதாகாவும், பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு ஏற்படாது என்றும், இருநாடுகளும் நிதானத்தை கடைபிடிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்