பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - 6 பேர் பலி.. 19 பேர் நிலை?

x

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு துணை ராணுவப் படையின் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஆறு பாதுகாப்பு படையினரும், ஆறு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னுவில் உள்ள ராணுவ படை தளத்தின் மதில் சுவர் மீது தற்கொலை படை வீரர் ஒருவர் காரை ஓட்டி வந்து மோதியதை அடுத்து, ராணுவ படைத்தளத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 12 மணி நேரம் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், இதில் 16 பாதுகாப்பு படையினர் மற்றும் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்