இலங்கையில் ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், பசறை அருகே அரசு பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. பசறையில் இருந்து எக்கிராவ என்ற இடத்துக்கு சென்றபோது, மடுல்சீமை என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 20 பேரின் நிலைமை மோசமாக உள்ளதால் பதுளை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், விபத்து குறித்து பசறை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, சாலையில் இருந்து விலகிச் சென்றதால் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.