"விமான நிறுவனம் தொடங்க என்ன செய்ய வேண்டும்" - 10 வயது சிறுவனுக்கு பதில் அளித்த குவாண்டஸ் நிறுவனம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன், புதிய விமான நிறுவனம் தொடங்க ஆலோசனை கேட்ட விவரம் உலக அளவில் வேகமாக பரவி வருகிறது.
"விமான நிறுவனம் தொடங்க என்ன செய்ய வேண்டும்" - 10 வயது சிறுவனுக்கு பதில் அளித்த குவாண்டஸ் நிறுவனம்
Published on

ஆஸ்திரேலியாவை சேர்ந்த குவாண்டஸ் விமான நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ள அலெக்ஸ் ஜாக்குவாட் என்கிற 10 வயது சிறுவன், புதிய விமான நிறுவனம் தொடங்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனைக் கேட்டுள்ளான்.பள்ளி விடுமுறை நாட்களில் தனது சொந்த விமான நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் விமான நிறுவன செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களையும் கேட்டுள்ளான். இதற்கு பதிலளித்துள்ள குவாண்டஸ் விமான நிறுவனம், போட்டியாளர்கள் எங்களிடம் ஆலோசனை கேட்பது இல்லை என வேடிக்கையாக கூறியதோடு, ஒரு தலைமை செயல் அதிகாரி, மற்றொரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரியுடன் ஆலோசனை செய்கிறது எனவும் குறிப்பிட்டதோடு, நேரில் வருமாறும் சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com