அகதிகள் வேட்டையை தொடங்கிய பாக்.-எல்லா பக்கமும் போட்ட லாக்.."24 மணிநேரத்திற்குள்ள வெளிய போயிருங்க"

x
  • 1979 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மீது அன்றைய சோவியத் யூனியன் அரசு, படையெடுத்த போது, ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் அடைக்கலம் தேடி, அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர்.
  • ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் அதிகளவில் குடியேறிய ஆப்கான் மக்கள், அங்கேயே தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்..
  • இவர்களோடு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 2021-க்கு பிறகு, 6 லட்சத்துக்கும் அதிகமானோர், பாகிஸ்தானிற்கு குடிபெயர்ந்தனர்.
  • அந்த வகையில், பாகிஸ்தானில் ஆப்கனை சேர்ந்த 40 லட்சம் அகதிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையானோர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள்.
  • இந்நிலையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • பாகிஸ்தானை விட்டு வெளியேற நவம்பர் மாத தொடக்கம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருப்பவர்கள் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டு பின் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
  • இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் மக்கள் உதவிக்கரம் நீட்டினால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
  • பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேருந்து சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கன் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
  • இதனிடையே, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கன் செல்ல முயற்சிப்பதால் எல்லை பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • பாகிஸ்தானில் சமீபகாலமாக தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களுக்கும் ஆப்கன் மக்களுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் சந்தேகப்படுகிறது.
  • ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில், விலைவாசி உயர்வு தலை விரித்தாடுகிறது... இதனிடையே, அங்கு குடியேறியுள்ள ஆயிரக்காணக்கான அகதிகள் அந்நாட்டுக்கு பெரும் சுமையாக உருவெடுத்திருப்பதாக பாகிஸ்தான் கருதுகிறது.
  • அதனால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்