Pakistan Train | இரண்டாக பிளந்த ரயில்வே டிராக் - கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. தப்பிய பல உயிர்கள்
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. குவெட்டா நகரில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ரயிலை குறிவைத்து, ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டை மர்ம நபர்கள் பதுக்கி வைத்துள்ளனர். ரிமோட் மூலம் அவர்கள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். ஆனால், அதற்கு முன்பே, அந்த இடத்தை ரயில் கடந்து சென்றுவிட்டதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பலூசிஸ்தானில் உள்ள போராளிக் குழுக்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
Next Story
