உலகையே அதிரவைத்த பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் - தற்போது வெளியான புதிய தகவல்
பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் இருந்து இதுவரை 104 பணயக் கைதிகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஜாஃபர் (Jaffar) எக்ஸ்பிரஸ் ரயிலை மலைப்பகுதியில் நிறுத்தி, அதில் இருந்தவர்களை, பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படையினர் கடத்தினர். இதையடுத்து, கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய பணயக் கைதிகளை மீட்க பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Next Story
