Pakistan | Sheher Bano | படுவைரலாகும்.. பாக்., பெண் போலீஸ் PodCast அப்படி என்ன தான் சொன்னங்க..?

x

பாகிஸ்தான் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் இணையவாசிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். லாகூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷெர்பானோ நக்வி சமீபத்தில் பாட்கேஸ்ட் ஒன்றில் பேசியிருந்தார். அப்போது அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்த நிலையில், அவர் பாட்கேஸ்ட்டை பாதியில் விட்டு விட்டு வெளியேறினார்..

கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த அவர் ஒரு கொலை வழக்கை கையாண்டு விட்டு வருவதாக தெரிவித்தார். கொலை சம்பவத்தின் முழு நிகழ்வும் வெகு சீக்கிரமாக நிகழ்ந்து விட்டதாகக் கூறி, அதன் பின்னணியை சினிமா கதைபோல் விவரித்த விதம் நம்பும்படியாக இல்லை எனக்கூறி இணையவாசிகள் கேலி செய்து வருகின்றனர். மேலும் பிரபலமான சிஐடி நாடகத்தில் கூட இவ்வளவு வேகமாக கொலையாளியை பிடித்ததில்லை என்றும் அவர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்