``திரும்ப திரும்ப இந்தியாவை சீண்டும் டிரம்ப்"

x

இந்தியா-பாக். இடையே அணு ஆயுத போர்? - டிரம்ப் கருத்து

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தாம் முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலை தாம் முடிவுக்கு கொண்டு வந்ததாக ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியபோதும், நேட்டோ படைத் தலைவரை சந்தித்த பிறகு மீண்டும் தெரிவித்துள்ளார். மோதலை முடித்துக் கொள்ளாவிட்டால் உங்களுடன் அமெரிக்கா வர்த்தகம் வைத்துக் கொள்ளாது என்று கூறியதால், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை கைவிட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார். சண்டை முடிவுக்கு வராமல், இன்னும் ஒரு வாரம் நீடித்திருந்தால் அணு ஆயுதப்போராக மாறியிருக்கும் எனவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்