இளம் தலைமுறையினரை குறி வைக்கும் "மோமோ சேலஞ்ச்"

புளூ வேல் விளையாட்டின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மோமோ சேலஞ்ச் என்ற புதிய ஆபத்து, இளம் தலைமுறையினரை குறிவைத்துள்ளது...
இளம் தலைமுறையினரை குறி வைக்கும் "மோமோ சேலஞ்ச்"
Published on

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி, ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. Blue Whale-க்கு அடுத்து , மோ மோ சேலஞ்ச் என்ற புதிய தற்கொலை விளையாட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சவாலை ஏற்காதவர்கள் மன ரீதியாக மிரட்டப்படுகின்றனர்.

சவாலை ஏற்பதன் மூலம் , செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவதுடன், தற்கொலைக்கும் தூண்டப்படுகின்றனர். இந்த விளையாட்டின் ஆபத்தை அறிந்து, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளில் , விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல , வாட்ஸ் ஆப் நிறுவனமும், இது போன்ற ஆபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com