Missile | Trump | எதிரிக்கு எதிரி நண்பன்.. பாக்.,க்கு ஏவுகணை தரும் டிரம்ப்...சரண்டரான ஷரீஃப், முனீர்
அமெரிக்காவிடமிருந்து வான்வழி ஏவுகணைகளைப் பெற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அவரது அலுவலகத்தில் வைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் மற்றும் அந்நாட்டு ராணுவ அமைச்சர் அசின் முனீர் சந்தித்த நிலையில் , அமெரிக்காவின் சமீபத்திய ஏவுகணை ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளது.அமெரிக்காவிடமிருந்து AIM-120 என்ற மேம்பட்ட நடுத்தர தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் பெறும் என அமெரிக்கா போர் துறை அதிகாரப்பூர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இருப்பினும் எத்தனை ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.பாகிஸ்தான் தற்போது பயன்படுத்தும் பழைய வகை AIM-120C5 ஏவுகணையை பயன்படுத்தி வருகிறது.நீண்ட நிலையில் புதிய ஒப்பந்தத்தின்படி, மேம்படுத்தப்பட்ட AIM-120C8 என்ற புதிய வகை ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ளன.இந்த புதிய வகை ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்றால் அது F-16 ஃபைட்டர் ஜெட்களின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறனை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
