ஜகமே தந்திரம் ட்ரைலர் தழுவல்; நைஜீரிய சிறுவர்கள் அசத்தில் - வியக்கவைக்கும் காணொலி

நைஜீரிய சிறுவர்கள் உருவாக்கியுள்ள ஜகமே தந்திரம் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜகமே தந்திரம் ட்ரைலர் தழுவல்; நைஜீரிய சிறுவர்கள் அசத்தில் - வியக்கவைக்கும் காணொலி
Published on

நைஜீரிய சிறுவர்கள் உருவாக்கியுள்ள ஜகமே தந்திரம் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த ட்ரைலர் நாடு, மொழியை கடந்து பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் ஜகமே தந்திரம் ட்ரைலரை அப்படியே தத்ரூபமாக தழுவி நைஜீரிய சிறுவர்கள் காணொலியை உருவாக்கியுள்ளனர். வசனம், எழுத்தைகூட அசலாக பதிவு செய்திருக்கும் சிறுவர்களின் அபார திறனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com