Israel | Gaza | War | அத்துமீறிய இஸ்ரேல்.. காசாவில் கொன்று குவித்த சோகம்
- காசாவில் 44 நாளில் 500 முறை அத்துமீறிய இஸ்ரேல்
- காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் கடந்த 44 நாள்களில் 500 முறை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 342 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில், இஸ்ரேல், காசா இடையே கடந்த மாதம் 10-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 342 பேரை கொன்று குவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம், தங்கள் ராணுவ வீரர்களை ஹமாஸ் தாக்கியதால், பதிலுக்கு தாக்குதல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
Next Story
