Isreal Attack | Gaza | இஸ்ரேலின் கோர ஆட்டம் - காசாவில் ஓயாத அழுகுரல்
Palestine | Isreal Attack | Gaza | இஸ்ரேலின் கோர ஆட்டம் - காசாவில் ஓயாத அழுகுரல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 11 பாலஸ்தீனர்கள் கொலை காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... காசா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் ட்ரோன் தாக்குதலில் ஒருவரும், ஜபாலியா அகதி முகாமிலும், கான் யூனிஸிலும் நடந்த தாக்குதல்களில் 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்... இடைக்கால போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை 601 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... அத்துடன் போர் துவங்கியது முதல் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளது... மேலும், ரஃபா எல்லை கடுமையான கட்டுப்பாடுகளுடன் இயங்குவதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளிநாட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அவசர நோயாளிகளை உடனடியாக அனுப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
