வடகொரியாவில் சர்வதேச குழந்தைகள் தினம் கோலாகல கொண்டாட்டம்
சர்வதேச குழந்தைகள் தினம்...வருஷா வருஷம் ஜுன் 1ம் தேதி உலகின் பல்வேறு நாடுகள்ல கொண்டாடப்பட்டு வருது... அந்த வகையில, வடகொரியாவின் பியாங்யாங்-ல PYONGYANG இருக்கற மைதானத்துல குழந்தைகள் தின கொண்டாட்டம் பார்வையாளர்கள கவர்ந்துச்சு... ஒற்றைக் கால மடக்கி துள்ளுவது...கயிறு இழுப்பதுனு குழந்தைகளுக்கு ஏத்தா மாதிரி போட்டிகள் நடந்துச்சு...
இதுமட்டுமா... ஜம்ப் கயிறு, கையில பந்தோட நிக்காம ஓடுவது... ஃபுட்பால் கோல் அடிக்கறதுன்னு
சுவாரஸ்யத்துக்கு துளிகூட பஞ்சமில்ல...
குழந்தைகளுக்கு ஜாலியான மொமென்ட்டா அமைஞ்ச இந்த விழாவுல பேரன்ட்ஸ், டீச்சர்ஸும் கலந்துகிட்டாங்க...
மைதானத்துல தங்களோட குழந்தைகள் மகிழ்ச்சியா இருக்கறத பார்த்தபோது, தங்களோட குழந்தைப் பருவம் நினைவுக்கு வர்றதா சில பேரன்ட்ஸ் உணர்ச்சிப்பூர்வமா சொன்னாங்க...அரசுக்கு குழந்தைகள் மேல இருக்கற அக்கறைக்கு நன்றியும் தெரிவிச்சாங்க....
