India Vs Pakistan | வாய்க்கு வந்ததை பேசி மிரட்டிய பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத பதிலடி கொடுத்த இந்தியா
அணு ஆயுதம் தொடர்பான பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக சாடியுள்ளது.
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், தாங்கள் அழியும் நிலை வந்தால், அணு ஆயுதத்தை பயன்படுத்தி உலகின் 50 சதவீத பகுதியை அழிப்போம் என பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அணு ஆயுதம் பற்றிய அசிம் முனீர் பேச்சை சர்வதேச சமூகத்தின் சொந்த முடிவுக்கு விடுவதாக குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கும் நாட்டில் இருந்து இதுபோன்று கருத்து வருவது சந்தேகத்தை வரவழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாட்டில் இருந்து இப்படி பேசியது அபாயகரமானது என குறிப்பிட்டுள்ள வெளியுறவு அமைச்சகம்,
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என ஏற்கனவே கூறிவிட்டதாகவும்,
தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் எனவும் உறுதி அளித்துள்ளது.
