அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு
Published on
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர், ஆண்டு தோறும் இந்தியா சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர். அந்தவகையில் நியூயார்க் நகரில், இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தான் உடனே செல்ல வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கமலுடன் அவரின் மகள் ஸ்ருதி ஹாசன், நடிகை பூஜா குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com