பாகிஸ்தானையே உலுக்கிய தீர்ப்பு.. இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை..
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் தலா 52 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இருவரும் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
