"கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து தடுப்போம்" - இலங்கை கடற்படை வடக்கு தளபதி தகவல்

சர்வதேச கடல் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத ​செயல்களை, இந்தியாவுடன் இணைந்து விரைவில் தடுப்போம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
"கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து தடுப்போம்" - இலங்கை கடற்படை வடக்கு தளபதி தகவல்
Published on
சர்வதேச கடல் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத ​செயல்களை, இந்தியாவுடன் இணைந்து விரைவில் தடுப்போம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கச்சத்தீவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கடற்படை வடக்கு கட்டளை தளபதி பியஸ் டீ சில்வா, தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, சர்வதேச கடல்பகுதியில், இலங்கை கடற்படையின் ரோந்து அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும், கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது குறித்து இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் கூட்டுப்பயிற்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com