இஸ்ரேலை கொந்தளிக்க வைத்த ஹவுதிக்கள் - செங்கடலில் உச்சகட்ட பதற்றம்
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். Magic Seas என்ற வணிக சரக்கு கப்பலை வெடி வைத்து ஹவுதி அமைப்பினர் தகர்த்த நிலையில், கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான 'எடர்னிட்டி சி' Eternity C என்ற சரக்கு கப்பலையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியது.
கப்பலில் 25 பேர் பயணம் செய்த நிலையில், 6 பேர் மீட்கப்பட்டதாகவும், 4 பேர் கொல்லப்பட்டதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. செங்கடலில் ஒரே வாரத்தில் 2 கப்பல்களை ஹவுதிக்கள் மூழ்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
