Italy Landslide | பள்ளத்தாக்கில் தொங்கி நிற்கும் வீடுகள் - கோர தாண்டவம் ஆடிய இயற்கை..

#Italy | #Landslide | #WorldNews | #ThanthiTV Italy Landslide | பள்ளத்தாக்கில் தொங்கி நிற்கும் வீடுகள் - கோர தாண்டவம் ஆடிய இயற்கை.. மூச்சை நிறுத்தும் காட்சி இத்தாலியின் நிஸ்செமி நகரில் ஏற்பட்ட கடும் புயலைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவால், நூற்றுக்கணக்கான வீடுகள் பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு அபாய நிலையில் தள்ளப்பட்டுள்ளன. சுமார் 25,000 மக்கள் வசிக்கும் இந்த நகரம், மேடான பகுதியில் அமைந்துள்ளது. அந்த பகுதி கீழே உள்ள சமவெளியை நோக்கி மெதுவாக சரிந்து வருகிறது. இதனால் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் சில கட்டிடங்கள் முழுமையாக விளிம்பில் தொங்கும் நிலையில் உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com