Gaza Israel War | பஞ்சத்தில் வாடும் மக்களின் கைக்கெட்டிய உதவி..இடைமறித்த இஸ்ரேலின் கொடூர செயல்
காசா நோக்கி உணவு மற்றும் மருந்து பொருள்களை ஏற்றி வந்த படகுகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் இடைமறித்து சிறைபிடித்தனர். பசி, பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உதவும் வகையில், மத்திய தரைக்கடல் வழியாக நிவாரண பொருள்கள் படகில் கொண்டு செல்லப்பட்டன. காசாவை அடைய வெறும் 46 கடல்மைல் தொலைவே இருந்த நிலையில், இஸ்ரேல் கடற்படை வீரர்கள் படகுகளை இடைமறித்து அதில் இருந்தவர்களை சிறைபிடித்ததுடன் படகுகளையும் பறிமுதல் செய்து இஸ்ரேல் துறைமுகத்துக்கு கொண்டுசென்றனர்.
Next Story
